தோல்வியையே சந்திக்காத கோஹ்லி படை !!
![](https://static.wixstatic.com/media/d572ed_2f16162459aa415e99a0a08f0eca8f29~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_2f16162459aa415e99a0a08f0eca8f29~mv2.jpg)
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தோல்வியையே சந்திக்காமல் 19வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையே ஹதரபாத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் தொடர்ந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி 18 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத சாதனையைப் படைத்திருந்தது. உலக அளவில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் க்ளைவ் லாய்ட் 26 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் சாதனை படைத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். மூன்றாவது இடத்தை இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் லில்லிங்வொர்த் (19) மற்றும் இந்தியாவின் விராத் கோஹ்லி (19) ஆகியோர் பகிர்ந்துகொள்கின்றனர்.
Comments