கோஹ்லி தான் உலகின் சிறந்த வீரர் ; ரிக்கி பாண்டிங் புகழாரம்
- crazynewschannel
- Feb 10, 2017
- 1 min read

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைசிறந்த வீரர் என்று ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
தற்போதைய இளம் கிரிக்கெட் வீரர்களில் யார் சிறந்தவர்கள் என்று விராத் கோஹ்லி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், டி வில்லியர்ஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லிதான் தலைசிறந்த வீரர் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராத் கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேனா? என்று கேட்டால், அவர் சிறந்த பேட்ஸ்மேன்தான். கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்பிருந்தே தனது ஆட்டத்தை அடுத்த லெவனுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
எப்போதும் அவர்தான் சிறந்த வீரர் என்று அழைக்கலாமா? என்றால், தற்போது வரை ஒருநாள் போட்டியில் அவர்தான் சிறந்த வீரர் என்று கூறலாம். அவர் அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை 27 சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார். இதற்கு முன் எந்த வீரரும் இத்தனை சதம் அடித்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Comments