வங்கதேசத்தை வருத்தெடுக்கும் இந்தியா! கோஹ்லி சதம்!!
![](https://static.wixstatic.com/media/d572ed_b8f478f13a514442bbf1977d415e5d43~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_b8f478f13a514442bbf1977d415e5d43~mv2.jpg)
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 356 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இந்தியாவுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தாலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா முரளி விஜயுடன் ஜோடி சேர்ந்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து விஜய் – கோஹ்லி வங்கதேசத்தின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட அணியின் ஸ்கோரை உயர்த்திய போது விஜய் 108 ரன்களில் வெளியேறினார்.
அதன்பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி டெஸ்ட் அரங்கில் தனது 16வது சதத்தை பதிவு செய்தார்.
Comentarios