ரோஹித், ரித்திகா ஜோடியுடன் கால்பந்து பார்த்த கே.எல்.ராகுல்!
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியை, ரோகித் சர்மா, ரித்திகா ஜோடியுடன் சேர்ந்து இந்திய துவக்க வீரர் கே.எல்.ராகுல் ரசித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா. காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ள இவர், தனது மனைவி ரித்திக்காவுடன் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் தொடரின் பேயார்ன் முனிச், ஆர்சனல் அணிகள் மோதிய போட்டியை காண நேரில் சென்றுள்ளார்.
இந்த ஜோடியுடன் இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய துவக்க வீரர் கே.எல்.ராகுலும் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளார். சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து போட்டிகள் மீது அதிக ஆர்வம் செலுத்திவருகின்றனர்.
Comments