கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா, பாவனா போல் கொடுமைக்கு ஆளானார்- கீர்த்தி சுரேஷ் அப்பா பரபரப்பு தகவல்..
![](https://static.wixstatic.com/media/d572ed_935d9d4fb66e470da0bb0a2be80fe6af~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_935d9d4fb66e470da0bb0a2be80fe6af~mv2.jpg)
நடிகை பாவனாவை அவரின் முன்னாள் ட்ரைவர் உட்பட ஒரு சிலர் அவரை காரில் கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அதை வீடியோ எடுத்து போலீசிடம் போனால், வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
எதை பற்றியும் கவலை கொள்ளாமல், துணிவுடன் போலீசிடம் புகார் தந்த பாவனா மனம் ஒடிந்து உள்ளாராம். இந்த தகவலை தன் வலைதளத்தில் தெரிவித்து உள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
அவரும் பாவனாவும் சேர்ந்து நடிக்கவேண்டிய படம் இன்னும் ஒருவாரத்தில் துவங்குவதாக உள்ளதாம். ஆனால், இப்போதுள்ள மனநிலையில் என்னால் நடிக்கமுடியாது என்று விலகி விட்டாராம் பாவனா.
கடவுளின் தேசம், தாய்வழி சமூகம் என்று பெருமை பேசும் இந்த சமூகத்தில் இந்த தைரியமான பெண்ணையே மனம் நோக செய்ததற்கு சமூகத்தில் ஒருவனாக வெட்கப்படுகிறேன். ஆணாக தலைகுனிகிறேன் என்று சொல்லி உள்ளார்.
“இதே போல என் மனைவிக்கும் நடந்தது. அந்த ட்ரைவர் பெயர் சுனில்.எப்படியோ எந்த விபரீதம் இன்றி என் மனைவி தப்பித்தார்” என்று கேரளாவின் பெரிய தயாரிப்பாளரும் கீர்த்தி சுரேஷின் அப்பாவுமான சுரேஷ் சொன்னதாக ஒரு வலைதள பத்திரிகை தெரிவித்துள்ளது.
Kommentit