‘தூங்கப்போங்க தமிழ்நாடே, அவுங்க நமக்கு முன்ன முழிச்சிடுவாங்க…”கமல் நேற்று நைட் சொன்ன செய்தி? யாரை சொ
![](https://static.wixstatic.com/media/d572ed_21e2137c3d1049539d2357f2fc623d38~mv2.jpg/v1/fill/w_620,h_354,al_c,q_80,enc_auto/d572ed_21e2137c3d1049539d2357f2fc623d38~mv2.jpg)
கமல்ஹாசன் ட்வீட்டுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஒரு அகராதி வேண்டும். ஆனால், அதற்க்கு அர்த்தம் பின்னால் தெரிந்து விடும். தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம்,அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக நேற்று இரவு சில கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு நேற்று இரவே ,நடிகர் கமலஹாசன் இரண்டு பதிவை போட்டு இருக்கிறார். இதே 7 பிப்ரவரியில், விஸ்வரூபம் பட சிக்கலின்போது, அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக இருக்கும்போது,மக்களின் அதிர்வு அன்பு தனக்கு ஆதரவாக நின்றதாக ஒரு பதிவு.
தொடர்ந்த அடுத்த ட்வீட்டில், ”தூங்கப்போங்க தமிழ்நாடே, அவுங்க நமக்கு முன்ன முழிச்சிடுவாங்க’ என்று போட்டு உள்ளார்.
![](https://static.wixstatic.com/media/d572ed_59180d68d9334e1d93ffac74dde181a9~mv2.jpg/v1/fill/w_474,h_363,al_c,q_80,enc_auto/d572ed_59180d68d9334e1d93ffac74dde181a9~mv2.jpg)
தற்போதைய அரசியல் பரபரப்புக்கு ஏற்ப இந்த ட்வீட் இருப்பதால், வழக்கம் போல கமல் இதற்குத்தான் ட்வீட் பண்ணியிருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றுக்கு? என்று குழம்பியுள்ளனர்.
Comments