ரிலையன்ஸ் புதிய அறிவிப்பு! 10 முக்கிய விசயங்கள்!
- crazynewschannel
- Feb 21, 2017
- 1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை மேலாண்மை இயக்குநர் முகேஷ் அம்பானியின் அறிவிப்பின் 10 முக்கிய அம்சங்கள்:
தற்போது இலவசத்தை அனுபவிப்பவர்கள் அதனை தொடர வேண்டும் என்றால் 99 ரூபாய் கட்டி ஜியோ பிரைம் ஸ்கீமில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் ஏற்கனவே இருக்கும் சலுகைகள் 2018 மார்ச் மாதம் வரை தொடரும். ஆனால் மாதத்திற்கு 303 ரூபாய் கட்டவேண்டும். அப்போது தான் டேட்டா இலவசமாக கிடைக்கும்.
170 நாட்களில் 10 கோடி பேர் ரிலையன்ஸ் குடும்பத்தின் 4 ஜி எல்.டி.இ ( கம்பியில்லா அதிவேக இணைய வசதி) சலுகையில் இணைந்துள்ளனர்.
இதன்மூலம் 50 லட்சம் பேர் நிலையான வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு நொடியிலும் 7 புதிய பயனாளர்கள் ஜியோவில் இணைந்து வருகின்றனர்.
உலகில் எந்த ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பமும், இந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை.
ஜியோ மூலம் தினமும் 200 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் டேட்டா பயன்பாட்டில் 150வது இடத்தில் இருந்த இந்தியா இன்று முதல் இடத்திற்கு வந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முடிவில் ஜியோ, நாட்டின் அனைத்து நகரங்கள், கிராமங்கள் என 99 சதவீத பகுதிகளில் பயன்படுத்தப்படும்.
ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மார்ச் 31 அன்று முடிகிறது. ஏப்ரல் 1 முதல் ஜியோ டேரிஃப் பிளான்களை வழங்கும்.
நாடுமுழுவதும் அனைத்து நிறுவன மொபைல் போன்களுக்கும் ஜியோவில் இருந்து இலவசமாக பேசிக்கொள்வதை உறுதி செய்துள்ளோம்.
Comments