என்னது ஜெ., அறிவிப்பு அமலுக்கு வரலயா? போலீசார் குமுறல்..!
- crazynewschannel
- Mar 15, 2017
- 1 min read

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, துறை சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களின் பதவி மற்றும் பணிப்பிரிவுகளின் அடிப்படையில் தற்போது 200 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் இடர்ப்படி இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், காவல் பணியாளர்களுக்கு அவர்களின் பதவிக்கேற்ப 100ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் சீருடை மற்றும் உபகரணப்படி மாதம் ஒன்றுக்கு ரூபாய் 100 உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, சீருடை மற்றும் உபகரணப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக சட்டசபையில் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரே கூட உள்ள நிலையில், இடர்ப்படி உயர்வு வழங்குவதற்கான அரசாணையே இன்னும் வெளிவராததால் இடர்ப்படி அறிவிப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை.
ஜெயலலிதாவின் புகழ் பாடி நடத்தப்படும் இந்த ஆட்சியில், ஜெயலலிதாவின் அறிவிப்பே இன்னும் அமலுக்கு வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இப்படி ஒரு அறிவிப்பு ஜெயலலிதா வெளியிட்டது ஆட்சியாளர்களுக்கே நினைவு இல்லையா அல்லது அறிவித்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டனவா என கண்காணிப்பதில்லையா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
அறிவித்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி இருந்தால்தானே அந்த உணர்வு வரும். அறிவித்ததை எல்லாம் செயல்படுத்த வேண்டுமா என்ன?
அப்படி செயல்படுத்தாவிட்டால் மக்கள் நினைவிலா வைத்துக் கொள்ளப்போகிறார்கள்? என்னமோ இனியாவது மக்கள் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
टिप्पणियां