ஜெ.,வின் மோதிரம் தான் உன்னை ஆட்டி படைக்கிறது, அதை முதலில் கழட்டு : சசிக்கு பயத்தை காட்டிய ஜோதிடர் !
ஜெயலலிதா அணிதிருந்த வைர மோதிரத்தை, அவரது இறப்பிற்கு பிறகு சசிகலா அணிந்து கொண்டார். தற்போது அந்த மோதிரம் ராசியில்லை எனக்கூறி சசிகலா அதனை கழற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றி முதல்வராக வேண்டும் என்று சசிகலா கனவு கண்டார். ஆனால், அந்த கனவு பன்னீர்செல்வத்தின் மெரினா புரட்சிக்கு பிறகு சிக்கலாக மாறியதால் சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தனது ஆஸ்தான ஜோசியரிடம் சசிகலா இதுகுறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்த ஜோதிடர் முதல்வராக பதவி ஏற்பது தள்ளிப்போவற்கு காரணம் ஜெ.,வின் வைர மோதிரம் தான் எனவும், அதில் தான் தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறியவுடன், சசிகலா, ஜெ., அணிந்த வைர மோதிரத்தை தூக்கி எறிந்ததாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments