அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகளை அடக்க குவிந்த இளைஞர்கள் கூட்டம்...
- crazynewschannel
- Feb 5, 2017
- 1 min read

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப்போட்டி கடந்த சில நாட்களாகவே அரங்கேறிவருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்கள் உலகப் பெயர்போனவை.
இந்நிலையில் முதல் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தனர்.
காலை 8 மணிக்கு 4 கோவில் காளைகளை அவிழ்த்துவிட்டு போட்டியை தொடங்கி ஆரவாரமிட்டனர் ஜல்லிக்கட்டு குழுவினர். இந்தப் போட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியாக கருதப்படுவதால், சீறிவரும் காளைகளை அடக்க மதுரை மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளைஞர்கள் இங்கு குவிந்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்க ஏராளமான போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments