ஐ.பி.எல் மூலம் ரூ. 30,000 கோடியை எதிர்பார்க்கும் பி.சி.சி.ஐ!
![](https://static.wixstatic.com/media/d572ed_56bc86e484ee4659a9d96485e116332f~mv2.jpg/v1/fill/w_696,h_464,al_c,q_80,enc_auto/d572ed_56bc86e484ee4659a9d96485e116332f~mv2.jpg)
ஐ.பி.எல்., தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு ரூ. 30,000 கோடியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல்., இதன் ஒளிபரப்புக்கான ஒப்பந்த ஏலம் விரைவில் நடக்கவுள்ளது. இது இந்த ஆண்டு (2017) உடன் முடிவுக்கு வருவதால், வரும் 2018 முதல் 2027ம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடக்கவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ. 6,700 கோடிக்கு பி.சி.சி.ஐ., விற்பனை செய்திருந்தது. இந்த தொகை இந்த முறை ரூ. 18,000 முதல் ரூ. 30,000 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமமும் அடங்கும். ஆன்லைனில் 5 நிமிட தாமதமாக மட்டுமே ஒளிப்ப முடியும். ஒருவேளை ‘டி-வி’ மற்றும் ஆன்லைன் உரிமத்தை ஒரே நிறுவனம் கைப்பற்றும் பட்சத்தில் இந்த 5 நிமிட தாமத கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்படும் எனவும் பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
Comments