உலகின் 100 மாஸ் வீரர்கள் பட்டியல்..! தோனி., கோஹ்லிக்கு என்ன இடம் தெரியுமா ?
- crazynewschannel
- Jun 1, 2017
- 1 min read

உலகின் பிரபலமான 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை ESPN வெளியிட்டுள்ளது.
விளையாட்டுத் தொலைக்காட்சி நிறுவனமான ESPN ஆண்டுதோறும் பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இணையத்தில் தேடப்படும் அளவு மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள புகழ் ஆகியவற்றை அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ESPN பிரபலமான வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி 13வது இடத்தையும், முன்னாள் கேப்டன் தோனி 15வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சுரேஷ் ரெய்னா 90வது இடத்தையும் யுவராஜ் சிங் 95 இடத்தையும் பெற்றுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முதலிடத்தைப் பெற்றுள்ளார். மெஸ்ஸி 3-வது இடத்தையும் ரோஜர் ஃபெடரர் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
Comments