காஷ்மீர் மாநிலத்தில், தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரமாக இப்பிரச்னை நீடித்து வருகிறது. இதுவரை, 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள அருகு ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்த திருப்பாண்டி என்ற ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Comments