இந்தியாவின் வெற்றி பயணத்தை வங்கதேசத்தால் தடுக்க முடியாது ; கும்ப்ளே
வங்கதேச கிரிக்கெட் அணியுடனும் இந்தியாவின் வெற்றி தொடரும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அணில் கும்ப்ளே கூறியதாவது;
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் இந்த போட்டிக்கு பிறகு மேலும் சில டெஸ்டுகளில் விளையாட உள்ளோம். வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
Comments