ஹைதரபாத் டெஸ்ட், இந்திய அணி 365 ரன்கள் முன்னிலை!
![](https://static.wixstatic.com/media/d572ed_d190d5664ae74f3898597bb2596c72c6~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_d190d5664ae74f3898597bb2596c72c6~mv2.jpg)
இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாம் நாள் ஸ்கோரான 41 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அணியின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்த போது துவக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய வங்கதேச வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 4விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது.
இடைவேளைக்கு பின்னர் வங்கதேச வீரர்கள் சீரான வேகத்தில் ரன் சேகரிப்பில் ஈடுப்பட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாகிப் அல் ஹசன் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழத்தார்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்களுடனும், ஹாசன் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தற்போது வங்கதேசத்தை விட 365 ரன்கள் முன்னனியில் உள்ளது.
Kommentare