ஆஸ்திரேலியாவை இந்தியா ஒயிட் வாஷ் செய்யும்; கங்குலி !
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி “இந்திய தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் கிரிக்கெட்டில் நம்மால் சரியாக கணித்து கூற இயலாது. ஆனால், ஆஸ்திரேலியா 0-4 என ஒயிட்வாஷ் ஆனால், நான் கண்டிப்பாக அதிர்ச்சியடைய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Comments