தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம் ! இந்தியா 356 ரன்கள் முன்னிலை
- crazynewschannel
- Feb 13, 2017
- 1 min read

இந்திய-வங்கதேசம் இடையேயான இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய-வங்கதேசம் இடையேயான ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருந்ந்த நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 388 ரன்கள் எடுத்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 299 ரன்கள் முன்னிலை பெற்றது.
வங்கதேசத்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை 35 ஓவர்கள் தாக்கபிடித்த வங்கதேச அணி, இந்திய சுழலில் இருந்து தப்ப, வங்கதேச அணி 90 ஓவர்கள் தாக்கு பிடிக்க வேண்டும்.
Comments