இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. தப்பிக்க போராடும் ஆஸ்திரேலியா !
![](https://static.wixstatic.com/media/d572ed_331e9a2db79947c7be21a3dff896bb56~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_331e9a2db79947c7be21a3dff896bb56~mv2.jpg)
இந்தியா ஆஸ்திரேலியா இடையே ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்து 129 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் கேப்டன் 178 ரன்களும், மேக்ஸ்வெல் 104 ரன்களும் எடுத்து கைகொடுக்க முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினாலும்,7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஹா – புஜாரா கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
புஜாரா இரட்டை சதமும், விக்கெட் கீப்பர் சஹா சதமும் அடித்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நாளை ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் 129 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணியின் 8 விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும்.
Kommentare