பிரஸ் மீட்டுக்கு யாருமே வரல; திட்டித்தீர்த்த இளைஞர்கள்
![](https://static.wixstatic.com/media/d572ed_511e6ec44c9041e18f241ae8725f0026~mv2.jpg/v1/fill/w_960,h_400,al_c,q_85,enc_auto/d572ed_511e6ec44c9041e18f241ae8725f0026~mv2.jpg)
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இன்று பேஸ்புக் தளத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், மெரினாவில் 144 தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளது. இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கும் பகுதியிலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 30 நிமிடங்களுக்கு முன் தான் நமக்கு சொன்னார்கள் என்று பதியப்பட்டிருந்தது.
ஆகவே, கூட்டம் கூடினால் ‘பிரஸ் மீட்’ நடத்த அனுமதி மறுக்கப்படும். சட்டரீதியான
நடவடிக்கையும் பாயும் எனவும், திட்டமிட்டபடி ‘பிரஸ் மீட்’ நிச்சயம் நடக்க வேண்டும். எனவே, ஆதரவாளர்கள் யாரும் அங்கு வரவேண்டாம். பேஸ்புக்கில் லைவ்வாக கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்திருந்த பிரஸ் மீட்டை அடுத்து, அறிவித்திருந்த பேஸ்புக் லைவ், பேஸ்புக் தளத்தில் காத்திருந்து கமெண்ட்டாக வசை மழை பொழிந்து வந்தனர் இளைஞர்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சி பேஸ்புக் தளத்தில் ஒரு பதிவு பகிரப்பட்டது. அதில், திட்டமிட்டபடி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. எதிர்பார்த்தது போல் எந்த மீடியாவும் வரவில்லை. புகைப்படங்கள், வீடியோ, கட்சி கொள்கைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த பிரஸ் மீட்டில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டவர்கள் அதில் கலந்துகொண்டதாக போட்டோவும், வீடியோவும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments