“அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன்” ; சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் எச்சரிக்கை
தன் மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினால், சில முக்கிய ரகசியங்களை வெளியிட நேரிடும் என்று பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்தார். இது இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் “ஆட்சி, கட்சி பொறுப்பு வேண்டாம் என்று சொல்லி போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சசிகலா இன்று முதலமைச்சர் ஆகியே தீருவேன் என்கிறார். அதுமட்டுமில்லாமல் என்னை பச்சை துரோகி என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இப்படி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சசிகலா சுமத்தி வந்தால் யாருக்கும் தெரியாத சில ரகசியங்களை வெளியிட நேரிடும்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments