மூளைப்பகுதியில் காயம்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள்?
- crazynewschannel
- Feb 12, 2017
- 1 min read

நம்முடைய உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாமே முக்கியமானது தான். ஆனால், ஒவ்வொரு உறுப்புக்களின் முக்கியத்துவம் தான் வேறுபடுகின்றன. அதிலும், நம்முடைய தலையமைப்பை சற்று சிந்தித்துப்பார்த்தாலே தெரியும். தலையின் உள்ளே இருக்கக்கூடிய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும்.
அதனால் தான் மூளையை சுற்றி பாதுகாப்பு கவசம் போடப்பட்டுள்ளது. அந்த மூளையில் சிறு பாதிப்பு ஏற்படும் பொழுதும், அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். நம்முடைய மூளைப்பகுதியில் ஒன்றுக்கும் மேல் காயம்பட்டால், நமக்கு கவனக்குறைவு பிரச்சனை அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.
அதாவது, இரண்டுக்கும் மேற்பட்ட தடவை கடுமையான காயங்கள் ஏற்பட்டால், அதனுடைய தாக்கம் காயம்பட்டு 7 வருடங்களுக்கு பிறகும், காயத்தின் தாக்கம் இருக்குமாம். இதற்கு, Attention Deficit Hyperactivity Disorder (ADHD) என்று கூறுகின்றார்கள். “கவனிப்பு பற்றாக்குறை பிரச்சனை” என்று தமிழில் கூறப்படுகின்றது.
இந்த ஆய்வை அமெரிக்காவில் ‘சின்சினாட்டிஸ் ஹாஸ்பிட்டல் ஆஃப் மெடிக்கல் சென்டர்’ என்ற அமைப்பு மேற்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதில், கவனிப்பு பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்கு பெற்றோர்கள் தான் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும், அதேபோன்று, சமூக வலைதளங்களில் அவர்களை அதிக அக்கறை செலுத்த வைக்கும் பொழுது, இந்த பிரச்சனைகள் ஓரளவு தீர்க்கப்படும் என்றும் அந்த ஆய்வு ஆலோசனை வழங்கியுள்ளது.
Comments