நீரின்றி வறண்டது ஒகேனக்கல் அருவி: வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்!
தமிழகத்தில் மிகவும் சிறப்புமிக்க சுற்றுலா தளங்களில் ஒகேனக்கல் அருவியும் ஒன்றாகும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறந்துவிடும் நீர் ஒகேனக்கல் அருவியை வந்தடையும். காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரும்போது ஒகேனக்கல் ஐந்தருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகமாகவே காணப்படும். அருவியில் குளித்து மகிழ்ந்து, பரிசலில் சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்வார்கள்.
ஆனால் தற்போது ஒகேனக்கல்லில் போதிய நீர்வரத்து இல்லாததால் தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருப்பதால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீன் விற்பனையாளர்கள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
Comments