மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் திட்டம்
கடந்த வருடம் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தக் கூடாது என நீதிபதிகள் நீதிபதிகள் «ள்வி எழுப்பினர். மேலும் உத்தேச தேர்தல் தேதி வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் மே 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறியது.
Comments