நீதிபதி குன்ஹா வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..
- crazynewschannel
- Feb 16, 2017
- 1 min read

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய ஜான் மைக்கேல் டி குன்ஹா மற்றும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால், கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், அதிமுகவினர் பெங்களூரில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது அந்த தீர்ப்பை வழிமொழியும் வண்ணம் அமைந்திருப்பதால், சில விரோதிகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என யூகித்த பெங்களூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்சூட் 2 பேரின் வீடுகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
Comments