தென்மேற்கு பருவமழை எதிரொலி.. கோவை, திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை!
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
அதே போன்று நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் மழை பெய்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் விடுதி அறையிலேயே தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வால்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
Comments