பெங்களூரில் தொடரும் கனமழை..! இடியும் நிலையில் 5 மாடி கட்டிடம்..! குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்…!!
![](https://static.wixstatic.com/media/d572ed_ebff417626314e49b026be33d7b4e577~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_ebff417626314e49b026be33d7b4e577~mv2.jpg)
பெங்களூரில் கடந்த 3 நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
முதல் நாள் மழையால் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்குள் அடுத்த நாள் மழையால் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக கோரமங்களா மற்றும் சுற்றுப்புறவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அருகில் உள்ள ஈ.ஜி புரா என்ற இடத்தில் மழைக்கு 5 அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. கட்டுமான நிலையில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு தற்போது இடியும் நிலையில் உள்ளது.
2 அடுக்கு மட்டுமே கட்ட அனுமதி பெற்ற இதன் உரிமையாளர் விதிமுறையை மீறி 5 மாடி கட்டிடம் கட்டி உள்ளார். இதனால் பாரம் தாங்காமல் கட்டிடம் விரிசல் விட்டு இருந்தது.
தற்போது பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடியும் நிலையில் உள்ளது. எனவே இதனை இடித்து தரைமட்டமாக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டிய அதன் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments