நாங்க ரெடி, நீங்க ரெடியா? ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹஸ்சி மிரட்டல்!
![](https://static.wixstatic.com/media/d572ed_0a0d2a7ab5f24b72b97fdcb61e80ecfe~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_0a0d2a7ab5f24b72b97fdcb61e80ecfe~mv2.jpg)
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 23ம் தேதி புனேயில் தொடங்க உள்ளது.
இந்த போட்டிகள் குறித்து பல அணிகளும் பல்வேறு கருத்துகளை கூறி வருவது, இந்திய அணியின் தற்போதைய வலுவான நிலையை பார்த்து அச்சப்படுவது போலவே தெரிகிறது. அதுவும் கோலியின் பார்ம் பலரை மிரட்டி வருவது நன்றாக தெரிகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹஸ்ஸி கூறும்போது, தற்போது விராட் கோலி நல்ல பார்மில் இருக்கிறார்.
அவரது அதிரடிக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி பவுலர் மிட்செல் ஸ்டார்க் சவாலாக இருப்பார்.
அதற்கேற்ற வகையில் அவர் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். இதிலிருந்து இந்தியாவின் அதிரடியைக்கண்டு அச்சப்படுவது நன்றாக தெரிகிறது. எது எப்படியாகினும் இந்திய அணி சாதித்தால் சிறப்பு.
Commentaires