தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் சென்னை வருகையை அடுத்து, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளரும் அவரை சந்தித்து பேசினார்.
ஆளுநரை சசிகலா சந்தித்தபோது, அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சந்திப்புகள் முடிந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments