தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்களால் தமிழக முதல்வராக வி.கே சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வராக வி.கே சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தமிழகம் வருவதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசியலே தலைகீழாக மாறியிருக்கும் நிலையில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments