புராதன சின்னமான வேலூர் கோட்டையை கண்டு கொள்ளாத அரசு!
![](https://static.wixstatic.com/media/d572ed_1a7df80459104aa6bb9d77e578e364d3~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_1a7df80459104aa6bb9d77e578e364d3~mv2.jpg)
தமிழகத்தை ஆண்ட அரசர்கள் கட்டிய கோட்டைகளில் ஒன்றான வேலூர் கோட்டை கம்பீரமான தோற்றத்துடன் இன்றும் காணப்படுகிறது.
கோட்டையை சுற்றி நான்கு புறங்களிலும் நீர் நிலைகள் என எழில் மிகு தோற்றத்துடன், அந்த காலத்தில் கலை ரசனையுடன் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
சுற்றுலா பயணிகள் கோட்டையை சுற்றி பார்க்க, படகில் செல்ல தற்போது தடை செய்யபட்டுள்ளது. புராதன சின்னமாக விளங்கும் கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. நீர் நிலைகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
அரசர் காலத்தில் பராமரித்தது போன்று தோற்றமளிக்கிறது. அரசு இந்த கோட்டை மீது கவனம் செலுத்தி பராமிரப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அகழிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சுத்தம் செய்து சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments