இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை இல்லை!
![](https://static.wixstatic.com/media/d572ed_470cd4933a75426bbe2585c6e9343e88~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_470cd4933a75426bbe2585c6e9343e88~mv2.jpg)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலையை நிராகரிக்கும் புதிய மக்கள் தொகை கொள்கையின் வரைவு மசோதா, அசாம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அசாம் மாநில அரசின் புதிய மக்கள் தொகை கொள்கைக்கான வரைவு மசோதா இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை மறுக்கப்படும். அவ்வாறு, அரசு வேலை பெற்றாலும், வாழ்நாள் முழுவதும் அவர் அதே வேலையில் தான் இருக்க வேண்டும்.
இதே போல, குழந்தை திருமணம் செய்துகொண்டவரும் அரசு வேலைக்கான தகுதியை இழப்பார்.
இதுகுறித்து, பேசிய அம்மாநில சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, “புதிய மக்கள்தொகை கொள்கை மூலம் பெண்களுக்கு அரசு வேலையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஜூன் மாதம் வரை பொதுமக்களின் இதுகுறித்து கருத்துக்கள் பெறப்படும் என்றும் பின்னர் சட்டப்பேரவையில் இதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அமைச்சர் ஹிமந்தா தெரிவித்தார்.
Commentaires