கூவத்தூர் ரிசார்ட்டை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு : 700 போலீசார் குவிப்பு!
- crazynewschannel
- Feb 12, 2017
- 1 min read

அதிமுகவில் உட்கட்சி சண்டையால் அனைத்து எம்.எல்.ஏக்களையும் காஞ்சிபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசாட்டில் சசிகலா தரப்பினர் அடைத்து வைத்துள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசாட்டை சுற்றியும் 200 குண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரிசார்ட் எதிரே பல்வேறு கிராமத்திற்கு செல்லும் வழியை குண்டர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
இனால் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாதபடி விரட்டி அனுப்பி வைக்கின்றனர் என்று பொதுமக்கள் போலீசாரிடம் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்து தனக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று ஆலோசனை நடத்துவதற்காக ரிசார்ட்டுக்கு சென்றிருந்தார்.
இதனை கேள்விப்பட்ட கிராம மக்கள் சசிகலாவை முற்றுகையிடுவதாக தகவல் வந்தது. இதனால் ரிசார்ட்டை சுற்றி 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments