10 ஆண்டுகளில் 40 பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும்.. இமயமலை உருகி விடும்.
பூமியில் வெப்பம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பூமியின் வெப்பத்தை குறைக்க எவ்வளவோ உலக நாடுகள் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் புவி வெப்பமயமாதலை தடுக்க முடியவில்லை.
இது வரும் காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த பூமியானது இப்போது இருக்கும் வெப்பத்தை விட 4 டிகிரி கூடுதலாகும். இவ்வாறு அதிகரிக்கும் வெப்பத்தால் இமாலய மலையில் உள்ள பனிகட்டிகள் மிக வேகமாக உருகி வருகிறது. இதனால் புவி வெப்பமடைவதை தடுக்க நாம் எல்லோரும் கை கோர்த்து செயல்பட வேண்டிய காலம் இது.
இது தொடர்பாக நாம் அதிக மரக்கன்றுகளை நடவேண்டும். தண்ணீரை வீணாக்க கூடாது. காற்று மாசு ஏற்படாமல் இருக்க பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது மற்றும் பிளாஸ்டிக்கை எரிக்க கூடாது என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அனைவரையும் சென்றடைந்தாலும், அதனை யாரும் கடைபிடிப்பதில்லை.
நமக்கென்ன என்ற தோரணையில் உள்ளனர். இந்த புவி வெப்பமடைவதை ஒரு தனி மனிதனால் போராடி தடுக்க முடியாது. அனைவருமே உணர்ந்தால் மட்டுமே தடுக்க முடியும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Comments