20 ஆயிரம் கொடு..! இல்லை படத்தை பேஸ்புக்கில் போடுவேன்..! பா.ஜ பிரமுகரின் கீழ்த்தரமான செயல்..! நின்று
![](https://static.wixstatic.com/media/d572ed_10dcc6ddfaab43eaa2712fe1d23fea9c~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_10dcc6ddfaab43eaa2712fe1d23fea9c~mv2.jpg)
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் கல்லூரி நண்பர் ஒருவரை இளம்பெண் சந்திக்க சென்றிருந்தார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. (moral-policing-in-shivamogga )இது குறித்து அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக பா.ஜ பிரமுகர் நடராஜ் சென்றார். கல்லூரி நண்பர்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததை பார்த்தார்.
உடனே காரில் இருந்து கீழே இறங்கினார். அவர்களிடம் சென்று எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி தைரியமாக பேசி கொண்டிருப்பீர்கள் என கூறி மிரட்டினார். மேலும் அவர்கள் இருவரையும் செல்போனில் படம் பிடித்தார். மேலும் ரூ 20 ஆயிரம் கொடுங்கள். இல்லை என்றால் படத்தை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மேலும் பா.பிரமுகர் இப்படி ஒரு கீழ்தரமான செயலை செய்ய மாட்டார் என நினைத்தனர். ஆனால் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பா.ஜ பிரமுகர் அந்த படத்தை சமூக வலைளத்தில் வெளியிட்டார். இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் திருமணம் நின்று போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சாகர் போலீஸ் நிலையத்தில் பா.ஜ பிரமுகருக்கு எதிராக புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பா.ஜ பிரமுகரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments