“இதே தான் கேப்பீங்களா?”- கடுப்படித்த காஜல்! என்னதான் நடந்தது?
காஜல் அகர்வால் இப்போ படு பிசி. ஒருபக்கம் அஜித் ஷூட்டிங். இன்னொரு பக்கம் விஜய் ஷூட்டிங்குக்கு ரெடி. தெலுங்கில் சிரஞ்சீவி படம் பிச்சிகிட்டு போனதில் அங்கேயும் மார்க்கெட் கொஞ்சம் சூப்பர் என்று சொல்லுகிறார்கள்.அடுத்தடுத்த என்ன படம் பண்ணலாம்ன்னு காஜல் ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், பார்க்கிறவங்க எல்லாம் எப்போ கல்யாணம்ன்னு கேக்கறாங்களாம். அதனால் கோபம், கோபமா வருதாம்.‘ஒரு நடிகைக்கு வயசு 30 ஆயிடக்கூடாதே, எப்போ கல்யாணம்? எப்போன்னு நச்சரிக்கிறாங்க.சார், கல்யாணம் பண்ணிட்டா, அம்மா, அக்கா கேரக்டர் தானே தரீங்க. கல்யாணத்துக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம். எப்பவும் போல நடிகைகளுக்கு வேலை போல கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்க வாய்ப்பு தரணும்.அதுவும், ஹீரோயினாக.” என்று ஒரு பேட்டியில் கூறி உள்ளார் காஜல்.
Commenti