இந்துமத கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஹங்கேரி காதலர்கள்.. மணமக்களாக வழியனுப்பி வைத்த கேரளா!
கேரள மாநிலம் கட்டப்பனாவில் உள்ள ஒரு கோவிலில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதை பொதுமக்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த காதலர்கள் ஆண்டார்ட் தகியம் (53), ரெஜினா ஹஸ்டடி (33). இந்துமத கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர்கள் தங்களது திருமணத்தை இந்தியாவில் நடத்த வேண்டும் என எண்ணினர்.
கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடால் ஈர்க்கப்பட்ட அவர்கள் தங்கள் திருமணத்தை “கடவுளின் சொந்த நாடு” என்று அழைக்கப்படும் கேரளாவில் நடத்த முடிவு செய்தனர்.
அதற்காக, கேரளா மாநிலம் கட்டப்பனாவில் உள்ள பிரசித்திபெற்ற குழித்தொளு துர்கா தேவி அம்மன் கோயிலை தேர்வு செய்தனர். கடந்த வியாழக்கிழமையன்று அந்த கோவிலுக்கு மாப்பிள்ளை, பெண் மணக்கோலத்தில் வந்த அவர்களுக்கு, தலைமை புரோகிதர் மந்திரங்கள் ஓத மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டினார்.
இவர்களது திருமணத்தைக் கான ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு அம்மாநிலத்தின் பிரதான உணவான தோரன், காளான் மற்றும் அடை பரிமாறப்பட்டது.
பல்லாயிரம் மைல்கள் கடந்து, உறவினர்கள் யாரும் இன்றி கேரளாவிற்கு வந்து திருமணம் செய்த மணமக்களை தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக பொதுமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Comments