ஸ்கைப் சேவைக்கு ஆதார் கட்டாயம்?
- crazynewschannel
- Feb 22, 2017
- 1 min read

நாடு முழுவதும் வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட அரசு சலுகைகள், திட்டங்கள், மானியங்களை பெறவும், செல்போன் சேவைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், தற்போது ஆதார் எண்ணை பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இதுகுறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ஆதார் மூலம் மானியம் வழங்குவதை மத்திய அரசு மேலும் பல திட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அமெரிக்க நிறுவனங்கள் கருதுகின்றன.
இந்தியாவில் செயல்பட்டுவரும் அமெரிக்க நிறுவனங்களும் தங்களது குறிப்பிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில், ஸ்கைப் சேவைக்கு ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்த மைக்ரோசாப்ட் விரைவில் அறிவிக்க உள்ளது.
மேலும், பல அமெரிக்க நிறுவன தலைவர்களும் ஆதார் சேவை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments