என் மாற்றத்திற்கு காரணம் அனில் கும்ப்ளே தான் – கோஹ்லி புகழாரம்...
இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே தன்னை நிறைய மாற்றியிருப்பதாக இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி “கும்ளே அவர்கள் பயிற்சியாளராக வந்தபிறகு அவரது அனுபவத்தை கொண்டு என்னுடைய விளையாட்டை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.
அனில் கும்ளேவும் ஆக்ரோஷமாக விளையாடுபவர் தான் என்றாலும் கூட, எப்போது அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அந்த வகையில் என்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை கும்ளே சரி செய்துள்ளார் என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
Comentarios