பரப்பன அக்ரஹாராவில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் சசிகலா?!- பரபரப்பு தகவல்...
- crazynewschannel
- Feb 20, 2017
- 1 min read

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தடனைபெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவுக்கு சரணடைய வந்தபோது திடீரென சிறைக்கு வெளியே நடந்த கலவரத்தை சசிகலா தரப்பு திட்டமிட்டு அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவுக்கு அருகே உள்ள அத்திபெலேவைச் சேர்ந்த ரவுடி ஒருவனுக்கு கலவரம் செய்வதற்காக பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அந்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்தான் இந்த கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது பொய் எனத் தெரிய வந்துள்ளது. இந்த கலவரத்தை காரணம் காட்டி பெங்களூரு சிறைக்குள் சசிகலாவுக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி அவரை தமிழக சிறைக்கு மாற்றவே இந்த நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கலவரத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சசிகலா தரப்பு தான் இதுபோன்று ரவுடியை செட்டப் செய்ததாகக் கூறியுள்ளனர்.
Comments