கள்ள நோட்டு எதிரொலி : மும்பை, கொல்கத்தா துறைமுகங்களிலும் சோதனை.!
சென்னை துறைமுகத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை துறைமுகத்தில் கடுமையான சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பலில் இருந்து இறக்குமதியாகும் கன்டெய்னர்களை வெளியே அனுப்பாமல் சோதனைக்கு பிறகே துறைமுகத்தை விட்டு வெளியே அனுமதிக்கின்றனர்.
அதேப்போல் சென்னையை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா துறைமுகங்களிலும் கள்ள நோட்டுகள் கடத்தப்படுகின்றதா என்று அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments