லா லிகா கால்பந்து தொடர்: மெஸ்ஸி புதிய சாதனை!
![](https://static.wixstatic.com/media/d572ed_c2e79d7132354944afb5ba3f3dacb4ff~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_c2e79d7132354944afb5ba3f3dacb4ff~mv2.jpg)
லா லிகா கால்பந்து தொடரில், நேற்று இரவு நடந்த போட்டியில், எப்சி பார்சிலோனா-அத்லெடிக் பில்போ அணிகள் மோதின. பார்சிலோனா நகரில் உள்ள கேம்ப் நுயூ மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில், 3-0 என்ற கோல் கணக்கில் எப்சி பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.
18வது நிமிடத்தில் அல்சாசர், 40வது நிமிடத்தில் மெஸ்ஸி, 67வது நிமிடத்தில் விடால் ஆகியோர் எப்சி பார்சிலோனா அணிக்கு கோல் அடித்தனர். இதில், 40வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் ‘ப்ரீ கிக்’ மூலம் கிடைத்தது. ‘ப்ரீ கிக்’ மூலமாக எப்சி பார்சிலோனா அணிக்கு ெமஸ்ஸி அடித்த 27வது கோல் இது. இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை மெஸ்ஸி படைத்தார்.
எப்சி பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரான ரொனால்டோ கோமன், அந்த அணிக்காக 26 கோல்களை ‘ப்ரீ கிக்’ மூலமாக அடித்துள்ளார். அந்த சாதனையை தகர்த்த மெஸ்ஸி, ‘ப்ரீ கிக்’ மூலமாக எப்சி பார்சிலோனா அணிக்கு அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments