பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலி : தெருநாய்களை பிடிக்கும் மாநகராட்சி.!
கோவையில் ஈஷா மையம் சார்பாக புதியதாக கட்டப்பட்டுள்ள சிவன் சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடிக்கு ஈஷா மையம் சார்பில் ஜக்கிவாசுதே அழைப்பு விடுத்துள்ளார்.
அவரின் அழைப்பை ஏற்று இன்று கோவைக்கு விமானம் மூலம் வருகின்றார். இதனையடுத்து விமானநிலையத்திலிருந்து ஈஷா யோகா மையம் வரைக்கும் இருக்கின்ற தெருநாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடி சாலை வழியாக பயணம் செய்யும்போது நாய்கள் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments