துவங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி..! முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது வங்கதேசம் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_e12ec825bafd4d69bad2971a6ade3b2d~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_e12ec825bafd4d69bad2971a6ade3b2d~mv2.jpg)
சாம்பியன்ஸ் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இன்று மதியம் துவங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் வங்கதேச அணியும் மோத உள்ளன.
Comments