காளஹாஸ்தி கோயிலில் யாகம் நடத்தியபோது தீ விபத்து..!
ஆந்திர மாநிலம் காளஹாஸ்தி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் சிறப்பு பெற்றது தினமும் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வருகை தருவார்கள். இன்று காலை கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனையடுத்து யாகம் நடைபெற்ற இடத்திலிருந்து நெருப்பு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக கோயில் நிர்வாகத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் எந்த உயிர்சேதம் ஏற்படவில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments