மன்னார்குடி கும்பலிடம் இருந்து எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ.,! யார்கிட்ட?
![](https://static.wixstatic.com/media/d572ed_43f5af7e8252417598b44617f73b3b4b~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_43f5af7e8252417598b44617f73b3b4b~mv2.jpg)
சசிகலா மீது முதல்வர் ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்து இன்று அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ் பக்கம் எந்த எம்.எல்.ஏக்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக நேற்று இரவில் இருந்தே எம்.எல்.ஏ.க்களை ஸ்டார் ஹோட்டல்களில் கண்காணிப்பில் வைத்திருந்தனர் மன்னார்குடி கும்பல்.
அங்கிருந்து நேரடியாக, தலைமை அலுவலகம் அழைத்துவரப்பட்டனர். எம்எல்ஏக்கள் அனைவரும் கடும் கெடுபிடியுடன் நடத்தப்பட்டனர்.
செல்போன்களும் கூட கண்காணிக்கப்பட்டன. இதற்கு பலர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணப்பாறை தொகுதி உறுப்பினர் சந்திரசேகர், கூட்டம் அதிகமாக உள்ளதால், நெஞ்சு படபடப்பாக வருகிறது எனக் கூறிவிட்டு, வெளியே சென்றுள்ளார்.
தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர், அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டாராம். எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு 131 பேர் வந்துள்ளதாக கூறினார் செங்கோட்டையன்.
பின்னர் நட்சத்திர கொறடா அதிமுக எம்.எல்.ஏ 129பேரும் கூட்டணி கட்சியினர் 3 பேரும் ஆதரவு கடிதம் அளித்ததாக கூறினார்.
கூட்டத்திற்கு வந்தவர்களை எண்ணிப்பார்த்த அதிமுக நிர்வாகிகள், சந்திரசேகரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடி கோஷ்டி கண்ணில் மண்ணை தூவி எஸ்கேப் ஆன மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர் எங்கே என சல்லடை போட்டு தேடிவருகின்றனர்.
பன்னீர்செல்வத்திற்கு யாரும் ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதால், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கெடுபிடியுடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Comments