‘மறு வார்த்தை பேசாதே?’எவ்வளவு நாள் ஜி சஸ்பென்ஸ் வைப்பீங்க?
![](https://static.wixstatic.com/media/d572ed_92c861ffe5a7421e8fb328fd8cb62e08~mv2.jpg/v1/fill/w_620,h_354,al_c,q_80,enc_auto/d572ed_92c861ffe5a7421e8fb328fd8cb62e08~mv2.jpg)
கௌதம் மேனன் மட்டும் இல்லை, வெற்றிமாறனும் வெந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் தனுஷின் கால்சீட். தன் படம், தன் மச்சினிச்சி படம், தானே தயாரித்து இயக்கப்போகும் படம்ன்னு ஏகப்பட்ட கமிட்மெண்டுகள்.
இதில், கவுதம் மேனனின் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா. ஒரு செட்யூல் முடிஞ்சதுன்னாங்க. அப்புறம் பெரிசா அதை பத்தி பேச்சே இல்லை. தனுஷ் டைம் தரலைன்னாங்க.
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு சிம்பு வரலை வரலைன்னு சொல்லி கடைசியில்,’ சம்பளம் வரலை, நான் வரலைன்னு’ சிம்பு சொன்ன கதையா…இது இருக்குமான்னு தெரியலை.
இந்த படத்தின் போஸ்டர், டீசர், ‘மறு வார்த்தை பேசாதே…’ பாடலின் டீசர் எல்லாம் வெளியாகி விட்டது. இப்போது முழுப்பாடலையும் வெளியிட்டு, யார் இசையமைப்பாளர் ன்னு மட்டும் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.
அடுத்த டி.ராஜேந்திரராய் மாற ஆசைப்பட்டு எல்லா டிபார்ட்மெண்டிலயும் தன் பங்கை காட்டும் தனுஷ் ஒருவேளை இசையமைச்சிருப்பாரோ…
Comentarios