2030ம் ஆண்டில் பூமிக்கு வரப்போகும் பேராபத்துகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_d207f5b888c740d59d738dcb018ae3e3~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_d207f5b888c740d59d738dcb018ae3e3~mv2.jpg)
பூமியில் உள்ள காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030ம் ஆண்டில் பூமிக்கு பேராபத்து நேரிடலாம் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதேபோல பூமி என்னும் கிரகத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு என்பது தான் உண்மை.
வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்து வருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.
இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 2030ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.
துருவங்கள் மாறும் இந்த நாலு லட்சம் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இந்துக்கள் கூறும் கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது.
இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:
கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்
நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர்.
தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.
Comments