அனுமதி இல்லாமல் பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்த தடை!
பிரதமர் மோடியின் படத்தை தங்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என காதி கிராம தொழில் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. காதி நிறுவனத்தின் காலண்டரில் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படத்தை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பிரதமர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
コメント