இந்தியாவுக்கு எதிரா உங்களால எதுவும் பண்ண முடியாது: ஸ்டீவ் வாக்!
![](https://static.wixstatic.com/media/d572ed_031e466a6ff945e08df980054cb13fcb~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_031e466a6ff945e08df980054cb13fcb~mv2.jpg)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்,ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்களால் ஒரு பயனும் இருக்காது, அதே நேரம் அறிமுகவீரர் மிட்சல் சுவீப்சன் மிரட்டுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் இந்தியா வர இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய வர இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு சீனியர் வீரர்கள் தொடர்ந்து அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் “ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சுவீப்சனின் ஆட்டத்தை இந்திய அணி இதுவரை பார்த்ததே இல்லை. சுவீப்சனை ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர்களுக்கு ஸ்பெஷலான யுத்திகளை இந்திய வீரர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருப்பார்கள். அதேநேரம் அறிமுக வீரர்களை அவர்களால் கணிக்க முடியாது. அதனால் தான் தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்துள்ளனர்”என்று தெரிவித்துள்ளார்.
Comentarios