யார் பின்னாலும் செல்லாதீர்கள்.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சசிகலா வேண்டுகோள்
![](https://static.wixstatic.com/media/d572ed_127db619069f42e8a8382dc43a4878df~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_127db619069f42e8a8382dc43a4878df~mv2.jpg)
சசிகலா முதல்வர் ஆவதற்காக பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவர் நேற்று முன்தினம் திடீரென்று தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு ஊத்தங்கரை, வாசுதேவநல்லூர் உள்பட 5 எம்.எல்.ஏக்கள் பகிரங்க ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருவதாக பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறும்போது, என்னை சட்ட மன்ற குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது என்னோடு நன்றாக இருந்தார் பன்னீர் செல்வம். இடைப்பட்ட 48 மணி நேரத்தில் என்ன நடந்தது. கருத்துகள் பரிமாறப்பட்டதா, ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதா என்பது தெரியவில்லை. எனவே யார் பின்னாலும் செல்லாதீர்கள். துரோகிகளை அடையாளம் காணுங்கள் என்றார்.
ความคิดเห็น